இந்து மா கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் கூட்டாக இணைந்து ஒரு செல்வாக்குள்ள சக்தியாக ஜப்பான் தன்னை வளர்த்துக் கொள்வதை கடந்த நான்கு வருடங்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. ஆனால் ஜப்பான் காலடி வைத்த எல்லா முயற்சிகளுமே படுதோல்வியில் முடிந்திருக்கின்றன.
அடுத்ததாக சீனாவை எடுத்துக் கொண்டால் சீனா தங்களுடைய போரியல் நோக்கங்களைவிட தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான மூல வளங்கள் வருவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலையில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்காவினுடைய நோக்கங்களிற்கும் சீனாவுடைய நோக்கங்களிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரையில் அது மிக துரிதமாக வளர்ந்துவருகின்ற பொருளாதார நாடாகும்.
அந்தப் பொருளாதாரம் இயங்குவதற்கு எரிபொருள் என்பது மிக மிக அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. சூடானிலிருந்துதான் இந்த எரிபொருட்கள் செல்கின்றன. சீனா மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமானால் இந்த எரிபொருள் விநியோகத்தின் மீது ஒரு அழுத்தத்தைக் கொடுத்தால் சீனா இரண்டு நாள் தொடர்ந்து இயங்குவது கூட நெருக்கடியாக இருக்கும்.
ஆகவேதான் சீனா தன்னுடைய எரிபொருள் கடற்பாதைக்கு தானே கடற்பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது.
ஹோலஸ் நீரிணையின் தென்பக்கத்தை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் கட்டுப்படுத்துகின்றன. இதனுடைய வட முனையில் ஈரான் இருக்கிறது. ஈரானுடைய கரையோரத்தில் வண்டர் அபாஸ் என்கின்ற துறைமுகத்தை கடற்படைத் தளமாக சீனா நீண்ட காலமாக விரிவாக்கும் நோக்கில் ஈரானுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. அந்த பாதையில் வரும்போது அடுத்ததாக வருவது பாகிஸ்தானின் கரையோரம். இந்த கரையோரத்தில் குவாடார் என்கின்ற இடத்தில் உள்ள கடற்படைத் தளத்தை விரிவாக்குவதற்கு சீனா முயற்சி செய்கின்றது.
போர் அல்லாத சிவிலியன்களின் தேவைகளுக்காகவே இந்த கடற்படைத் தளத்தை விரிவாக்குவதாக பாகிஸ்தானுக்கு உதவுவதாக சீனா கூறினாலும், சீனாவின் பாதுகாப்புக்கு இதுவும் உத்தரவாதமாக அமைந்திருக்கிறது.
இந்தப் பாதை அடுத்ததாகச் சந்திக்கும் இடம் இலங்கையினுடைய முனை. இந்த பகுதியில் சீனா முதலாவதாக சந்திப்பது மாலை தீவை. 1999 ஆம் ஆண்டு மாலைத் தீவிலுள்ள மொறர்கோ தீவு என்கின்ற பகுதியை தளமாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை சீனா ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு சீனப் பிரதமர் அங்கு சென்ற போது அந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளார்கள்.
2010 ஆம் ஆண்டு அந்த தளம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக இலங்கை, நீண்டகாலமாக இலங்கையினுடைய எரிபொருள் துறையோடு நெருங்கிய சம்பந்தமுடைய நாடாக சீனா இருந்து வருகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் அதனுடைய வளர்ச்சியில் நெருங்கிய தொடர்புள்ள நாடாக சீனாதான் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்தியா குறித்த ஸ்ரீலங்கா அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் அச்சம் காரணமாகவே சீனாவுடன் ஸ்ரீலங்கா தலைவர்கள் இந்த உறவை வளர்த்து வந்தார்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் திருகோணமலைக்கு மாற்றான ஒரு எண்ணெய்க் குதத்தை மேற்கு கரையில் 2001 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி அண்மையில் அதை ஸ்ரீலங்கா அரசிடம் கையளித்திருக்கிறது.
ஆனால் சீனாவுக்கு தன்னுடைய எரிபொருள் பாதையில் பிரச்சினை ஏற்படும்போது முக்கிய இடமாக முத்துராஜவலையில் இருக்கும் அந்த எண்ணெய்க் குதம் அமையுமென்பது புலனாகிறது.
அண்மையில் இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இந்தியாவுக்கு முழுமையாக கொடுக்கக்கூடாது என்பதற்காக சில ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வேலை நிறுத்த நடவடிக்கைகள் கூட இடம்பெற்றன. அதன் பின்னணியில் சீனாவின் நலன்கள் இருப்பதாகவே கொழும்பிலுள்ள ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அடுத்ததாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்தியா ஒரு சுதந்திர நாடாக காலடி எடுத்துவைப்பதற்கு முன்னதாகவே கே.எம். பனிக்கர் இந்தியா ஒரு கடல் வல்லரசாக வரவேண்டும் என்பது குறித்து எழுதியிருந்தார். அவருடைய நு}லில் து}ரதிருஷ்டியான சில விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது இந்தியா வல்லரசாக வரவேண்டுமானால் சொக்கோட்ரா தீவு, ஓடின் என்பவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும். மொறீசியஸைக் கட்டுப்படுத்த வேண்டும். மலாக்கா நீரிணையை இந்தியா மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் அவர் விரிவாக எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் கூறிய பின்னர் சுதந்திரமடைந்த இந்தியாவின் கருத்துகள் நீண்டகாலமாக இந்திய பெருநிலப் பரப்பில்தான் குறியாக இருந்தன. காரணம் சீனாவின் அச்சுறுத்தலும் பாகிஸ்தானின் சிக்கலும், இவற்றின் காரணமாக இந்தியாவின் கவனமெல்லாம் இந்திய பெரு நிலப்பரப்பில் தான் இருந்து வந்தது. ஆனால் 1970 களில் ஆரம்பத்தில் டிய10கோகாசியாத் தீவில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்த பின்னரும் 1977 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போரின்போது இந்த கடல் எந்தளவுக்கு முக்கியமான பங்கை வகித்தது?
அதேவேளை அந்த கடல் பகுதிக்கு அமெரிக்கா தன்னுடைய விமானந்தாங்கி கப்பலான பங்கு US Enterprices ஐ எவ்வாறு அனுப்பி ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்பவற்றையெல்லாம் அறிந்து கொண்ட பின்னர் இந்த கடலைப் பற்றிய சிந்தனை இந்தியாவுக்கு மீண்டும் தோன்றுகின்றது. அதனுடைய வெளிப்பாடாக இந்துமா கடலில் அநேகமான பகுதிகளில் இந்தியா கடல் ஒப்பந்தங்களை செய்வதற்கான ஊக்கத்தைக் கொடுக்கின்றது. அதில் இலங்கையுடனான கடல் ஒப்பந்தம், மாலைத்தீவுடனான முன்னீர் சந்தி ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்களை இந்தியா செய்து வருகிறது.
அதனு}டாக இந்த பிராந்தியத்தை தெளிவாக வரையறுக்கும் வேலையை இந்தியா செய்கிறது.
அதற்கு அடுத்ததாக இந்தியா இப்போது முதன்முறையாக சென்கரையோரத்தில் ளுநய டீசைன என்கின்ற பெயரில் கடற்படைத் தளத்தை நிறுவி வருவதோடு ரஷ்யாவிடமிருந்து வான்படைத் தாங்கி கப்பல் ஒன்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த வருடம் ஜனவரியில் இந்தியா செய்து கொண்டது. அதாவது இந்தியா ஒரு கரையோரப் பாதுகாப்பு முறையில் இருந்து இந்து மா கடல் பகுதியை கண்காணிக்கக்கூடிய ஒரு வளர்ச்சிப் போக்குக்கு வந்திருக்கிறது.
வங்காள விரிகுடாவின் வழியாகச் செல்லும் கடல் பாதை தொடுகின்ற இடம் இந்தியாவுக்குச் சொந்தமானது. அதாவது அந்தமான் நிக்கோபார் தீவுகள். இந்த தீவுகளுக்கு நடுவாகத்தான் இந்த பாதை போகின்றது. அந்த பகுதியை தனி கட்டளைத் தளமாக இந்தியா தற்போது உருவாக்கியுள்ளது. அடுத்ததாக இந்தியாவுக்கு இயற்கையான அரணாக இலட்சத் தீவுகள் உள்ளன.
இந்தியா நீண்ட காலமாக நம்பியிருப்பது இரண்டு இயற்கை அரண்களான இலட்சத் தீவுகளையும் அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் தான். அவை மட்டும் போதாது என்ற நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தற்போது இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தி வரும் ஒழுங்குகள்.
அடுத்ததாக டிய10கோ காசியா தீவு. இந்த தீவுதான் இப்பொழுதும் அமெரிக்காவினுடைய படை பலத்திற்கு அடித்தளமாகவுள்ளது.
அந்த விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கும் நிலைப்பாட்டையும் பார்க்கவேண்டும். டிய10கோ காசியா தீவு பிரிட்டிஷாரால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட தீவாகும்.
மொறிசியஸினுடைய ஒரு பகுதியாகத்தான் இத்தீவு இருந்து வந்தது. மொறீசியஸ் சுதந்திரமடைந்தபோது சட்டப்படி டியூ கோகாசியா தீவு மொறீசியஸிற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது கொடுக்கப்படவில்லை.
ஆனால், இந்தியா இப்போது வெளிப்படையாக மொறிசியஸ் தீவினுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறது. மொறிசியஸ் மீண்டும் டியூகோ காசியாவை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதனுடைய அடிப்படை என்னவென்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது. அதாவது மொறீசியஸ் தீவிற்கு டியூகோகாசியா மீண்டும் சொந்தமாகும் பட்சத்தில் அமெரிக்கா இந்துமா கடலில் காலு}ன்றுவதற்கு அடிப்படையான தளம் இல்லாமல் போகும். இதை அமெரிக்காவும் உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் இலங்கையில் ஒரு முக்கிய தளத்தை ஏற்படுத்துகின்ற வேலைகள் அண்மைக்காலமாக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதற்கான ஒப்பந்தம் 2002 ஜூலை மாதம் கைச்சாத்திட இருந்த போது இந்தியா அதில் தலையிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தடுத்திருக்கிறது. ஆனால் எவ்வாறாயினும் இலங்கையிலும் மாலை தீவிலும் காலு}ன்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகத் திட்டவட்டமாக இருக்கின்றது. இதில் இரண்டாம் பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு முன்னர் இரகசியமாக நடந்த இத்திட்டங்கள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. அதற்கான ஆவணங்களையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இதில் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் பின்னிப் பிணைந்துதான் இருக்கின்றது. ஏனென்றால் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினுடைய சாராம்சத்தைப் பார்த்தால் அதனுடைய அடித்தளத்தைப் பார்த்தால் இலங்கையில் வேறு நாட்டுப் படைகள் காலு}ன்ற முடியாது. இலங்கையின் எந்தவொரு வான்படைத் தளத்தையோ அல்லது கடற்படைத் தளங்களையோ குறிப்பாக திருகோணமலையையோ வேறு எந்த நாடும் பயன்படுத்த முடியாது. இந்த தளங்களை, துறைமுகங்களை இந்தியாவுடன் கூட்டாகத்தான் பயன்படுத்த முடியும் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டதற்கு அன்று ஏற்பட்ட அமெரிக்க அச்சுறுத்தல்தான் முக்கியமான காரணம். அன்று இதை பலர் கண்டுகொள்ளவில்லை.
ஈழத்தமிழர் பிரச்சினையின் ஊடாக ஓர் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி அதனு}டாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா கைச்சாத்திட்டுக் கொண்டது. அந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் இல்லாத நிலையில் இலங்கை அரசு மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியாது என்பதிலும் இந்தியா தெளிவாக இருக்கிறது.
சிங்கள அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இந்தியா தங்களை விழுங்கிவிடும் இந்தியா தமக்கு பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய நாடு என்கின்ற உணர்வில் அவர்கள் வரலாற்று hPதியாக சீனாவுடனும், அமெரிக்காவுடனும், பாகிஸ்தானுடனும் உறவுகளை வைத்துக் கொண்டு இந்தியாவை சமப்படுத்தப்பார்க்கிறார்கள். இந்தியாவினுடைய செல்வாக்கு பெரியளவில் வந்துவிடக்கூடாது. நேபாளத்தைப் போல் பங்களாதேஷைப் போல் இருக்கக்கூடாது. நாங்கள் தனித்துவமாக இருக்கவேண்டும்.
அதற்கு ஒரு வழி சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அமெரிக்காவுடனும் சில ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது தான் சிறப்பு வழி என்கின்ற வகையில் வரலாற்று hPதியில் இலங்கை சிங்கள அரசியல்வாதிகள் செயல்பட்டுள்ளனர்.
உதாரணமாக இலங்கையினுடைய வெளிநாட்டு வியாபாரம் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சரி அரைப் பங்கு இந்தியாவிடமிருந்தது. ஆனால் சுதந்திரமடைந்து பத்து வருடங்களில் அதை இருபது சதவீதத்திற்கு மாற்றிவிட்டார்கள்.
இது மீண்டும் இலங்கைக்கு கை நழுவி சென்று விடாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களுடைய அழுத்தம் தேவையாக இருக்கிறது என்பதை இந்தியா சரியான முறையில் கணிப்பிட்டு செயற்படுமென நம்புகிறேன்.
19.12.2004 சிவராம்
Tuesday, January 8, 2008
கடலாதிக்கப் போட்டியில் சிக்கியுள்ள இந்துமா கடல்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment